Soft Skills for Success - S3 - BT/Hindu College

Rotary Club of Batticaloa Heritage (RCBH) ஏற்பாட்டில் "வெற்றிக்கான மென் திறன்கள்" (Soft Skills for Success - S3) எனும் தலைப்பிலான தொழில்வாண்மைத்துவ சுய ஊக்குவிப்புப் பயிற்சியை பங்குபற்றல் அணுகுமுறையில்  8/3/2024 இல் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கினோம்.எமது 594வது பயிற்சியான இதனை இலாப நோக்கற்ற அடிப்படையில்(Not-for-Profit oriented) வழங்கினோம்.கல்லூரியின் பதில் உதவி அதிபர் திரு. எ. பிரியகாந்தனின் தலைமையில்  RCBH நடத்திய இச் செயலமர்வில் RCBH தலைவர் Rtn கி. கௌரிஸ்வரன் மற்றும் எந்திரி. Rtn புஜிந்தரன் ஆகியோரும் சுமார் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.தேர்ந்தெடுத்த மாணவர்களுக்குக் கற்றல் உபரணங்களையும் Rotary Club of Batticaloa Heritage (RCBH) அமைப்பினர் வழங்கினர்.RCBH மாவட்ட மானியத்தின் (District Grant) செயற்றிட்டமாக மொத்தம் ஐந்து பாடசாலைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

எம்மை தொழில்வாண்மைத்துவ பயிற்சியாளராக இனங்கண்டு அழைத்த RCBH தலைவர் Rtn  கி.கௌரிஸ்வரன்அவர்களுக்குச் சிறப்பு நன்றிகளும் பாராட்டுக்களும்.ஒருங்கிணைப்புக்களை மேற்கொள்ளும் கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கத்திற்கும் (EPTTU) தலைவர் திரு.எ.பிரியகாந்தன் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.சாட்டுக்களைச் சொல்லி வளவாய்ப்புக்களைத் தட்டிக்கழிக்காது தொலைநோக்குப் புத்தாக்கத் தலைமைத்துவத்துடன் செயற்பட்ட அனைவரினதும் உயர் பண்பு பாராட்டுக்குரியது.